ஆய்விதழ் அறிமுகம்
வணிக வித்தியம் ஆய்வு இதழானது இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழாகும் வணிக பொருளாதாரம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் தொடர்பான ஆய்வுகளை தாங்கிய இவ்விதழானது தமிழ் மொழி மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சக மதிப்பீடு செய்யப்பட்ட கல்விசார் சஞ்சிகையாகும் மேலும் இச் சஞ்சிகையானது முகாமைத்துவம் மற்றும் பொருளியல் ஆகிய துறைகள் சார்ந்த கோட்பாடு மற்றும் நடைமுறை ஆய்வுக் கட்டுரைகள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நூல் ஆய்வுகள் கட்டுரை ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்
இவ் ஆய்வு இதழானது பின்வரும் விடயப்பரப்புகளில் ஆராய்ச்சியை வெளியிடுவதற்கான ஒரு சிறப்புத் தளத்தை வழங்குகின்றது அதேநேரம் இப்பரப்போடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் அவ்விடயப்பரப்புகளாவன
- பொருளியலளவை
- வணிகப் பொருளியல்
- ஊழியப் பொருளியல்
- அபிவிருத்தி பொருளியல்
- சர்வதேச வணிகம்
- சுற்றுலா
- பொருளாதார அளவியல் மற்றும் புள்ளிவிபரவியல்
- வங்கியியல் மற்றும் காப்பீடு
- வணிகம் முயற்சியாண்மை மற்றும் சிறு வணிக முகாமைத்துவம்
- கணக்கியல் மற்றும் நிதி
- வியாபாரத்தில் தொழிநுட்பவியல்
- மனித வள முகாமைத்துவம்
- நிறுவன நடத்தை
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
- வணிக முகாமைத்துவம்
- தந்திரோபாய முகாமைத்துவம்
வணிக வித்தியம் என்ற ஆய்வு இதழானது பொருளாதாரம், முகாமைத்துவம் மற்றும் வணிகம் ஆகிய துறைகளிலுள்ள ஆறிஞர்கள், பட்டதாரிகள் மற்றும் கல்வியலாளர்கள் தங்கள் ஆய்வுப் பெறுபேறுகளை வெளியிடும் தளமாக உள்ளது. மேலும் இவ் ஆய்வு இதழானது சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அணுகுமுறையினூடாக வெளிவரும்.
கட்டணம்
வணிக வித்தியம் ஆய்வு இதழில் கட்டுரைகளை வெளியிடுவதற்கு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது
வெளியீட்டு தடவைகள்
வணிக வித்தியம் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிடப்படும்