ஆய்வாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்
ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு
ஆய்வுக் கட்டுரையானது வணிக வித்தியம் ஆய்வு இதழின் வடிவமைப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்கும் போது குறிப்பிட்ட வடிவமைப்பை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையானது இதழாசிரியர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் குறித்து கட்டுரை ஆய்வாளருக்கு தெரிவிக்கப்படும். ஆய்வாளர்கள் கட்டாயமாக 3000 தொடக்கம் 5000 வரையான சொல் வரம்பை கொண்டிருக்க வேண்டும்.
பெறுபேறு அட்டவணைகள் புள்ளிவிபரங்கள் மற்றும் குறிப்புக்கள் உட்பட முழு கட்டுரை ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையினை editorjbems@esn.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
சமர்ப்பித்தல் செயல் முறையும் சரிபார்த்தல் பட்டியலும்
அனைத்து ஆசிரியர் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரை ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பப்படலாம். கட்டுரைகள் எழுத்து மற்றும் வசன பிழைகளற்று இருக்க வேண்டும். தரத்தை பூர்த்தி செய்யாத ஆய்வுக் கட்டுரைகள் மேலதிக மேம்படுத்தலுக்காக திருப்பி அனுப்பப்படும்.
பூரண கட்டுரை அமைப்பு
ஒவ்வொரு கட்டுரையும் பின்வரும் ஒழுங்கு முறையில் அமைந்திருத்தல் வேண்டும்.
பிரதான தலைப்பு பக்கத்திற்கான முக்கிய தகவல்கள்
ஆசிரியர் பெயர் மற்றும் இணைப்புக்கள் : ஒவ்வொரு எழுத்தாளர்களின் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டு ஆசிரியர்களின் முகவரிகளை வழங்கவும்.
முதல் ஆசிரியரின் முழுப் பெயர் : (கொடுக்கப்பட்ட முதன்மைப் பெயர் மற்றும் குடும்பப் பெயரை சுருக்க வேண்டாம். நடுப் பெயர்கள் சுருக்கமாக இருக்கலாம்.
நிலை, துறை மற்றும் பணிபுரியும் இடம் (உ10 ம் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனப் பெயர்), நகரம், மாகாணம், நாடு (நீங்கள் பணிபுரியும் இடத்தின்), மின்னஞ்சல் முகவரி
இரண்டாவது ஆசிரியரின் முழுப் பெயர் : முதல் மற்றும் கடைசிப் பெயர்களை சுருக்க வேண்டாம்.
நிலை, துறை மற்றும் பணிபுரியும் இடம் (உ10 ம் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனப் பெயர்), நகரம், மாகாணம், நாடு (நீங்கள் பணிபுரியும் இடத்தின்), மின்னஞ்சல் முகவரி.
மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆசிரியர்களின் முழுப் பெயருடன் மேலே குறிப்பிட்ட தகவல்களையும் வழங்கவும்.
ஆய்வுக் கட்டுரைப் பிரதியின் பிரதான உள்ளடக்கத்தில் அறிமுகம், இலக்கியமீளாய்வு, ஆய்வு முறைகள், முக்கிய பெறுபேறு மற்றும் கலந்துரையாடல், மற்றும் முடிவுரை உள்ளடக்கியிருக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரையின் அறிமுகத்தில் ஆராய்ச்சியின் நோக்கம் கட்டாயம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
பிரதான உள்ளடக்கத்தில் அனைத்து அட்டவணைகள் மற்றும் புள்ளி விபரங்கள், குறியீடுகள் மற்றும் சுருக்கங்களின் பட்டியல், ஒப்புகை, குறிப்புக்கள் என்பன அவற்றின் ஒதுக்கப்பட்ட இடத்தில் சீரமைக்கப்பட வேண்டும்.
அட்டவணை
எல்லா அட்டவணைகளும் வரிசையாக இலக்கமிடப்பட்டு இருப்பதோடு அட்டவணைக்கான தலைப்பு தடித்த எழுத்தில் (Bold) இருக்கலாம். அட்டவணை இலக்கம் சரியாக கொடுக்கப்பட வேண்டும். பெரிய அளவிலான அட்டவணைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அட்டவணைகளாக பிரிக்கப்பட வேண்டும். இதனால் பக்க அளவுகளுக்கு இடமளிக்க முடியும். அட்டவணைகளின் அகலம் மற்றும் கன அளவு சமமாக இருப்பதோடு அனைத்து உள்ளடக்கமும் மையத்தில் அமைந்திருக்க வேண்டும். அட்டவணைகளின் தொடர் எண் மற்றும் தலைப்பு என்பன அட்டவணையின் மேல் குறிப்பிடப்பட வேண்டும்.
வரைபடங்கள்
அனைத்து வரைபடங்களின் இலக்கங்களும் ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட வேண்டும். வரைபடங்கள் பொருத்தமான இடத்தில் அமையப்பெற வேண்டும். வரைபட எண் மற்றும் தலைப்பு படத்தின் மேல் கொடுக்கப்பட வேண்டும். வரைபடத்தின் உள்ளடக்கம் தலைப்பில் விளக்கப்பட வேண்டும். கடைசிப் பக்கத்தில் உருக்கள் மற்றும் அட்டவணைகளை கொடுக்காமல் கட்டுரையில் தேவையான இடங்களில் அவற்றை வழங்கவும்.
ஒப்புகையளித்தல்
தனிநபர்கள், அமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கான ஒப்புகை வழங்க விரும்பினால் கட்டுரையின் முடிவில் தனிப்பகுதியில் உசாத்துணைகள் கொண்ட பட்டியலுக்கு முன் குறிப்பிடப்பட வேண்டும்.
அனைத்து உசாத்துணைகளும் அகரவரிசைப்படி கட்டுரையின் இறுதியில் பின்வரும் தரப்பட்ட முறையில் எழுதப்பட வேண்டும்.
- Journal Article: Shorrocks, A. F. (1995). Revisiting the Sen Poverty index. Econometrica: Journal of the Econometric Society, 1225-1230.
- Books: Jhingan, M. L. (2011). The economics of development and planning. Vrinda Publications.
- Book Chapter: Botkin, J (2006). What do you meant by Ecosystem in: Environmental Science of Living Plater, 3rd edition, E-age Publishing, New York.
- Conferences: Ganeshkumar. B, “Geospatial technology for disaster management”, International Conference on Disaster Mitigation and Management, PSNA College of Engineering and Technology, Dindigul, pp 234-238.
- Web Pages: Kandeepan J (2007) How to draw in Computers. IOP Publishing Physics Web. http://company.org/articles/news/11/6/16/2. Accessed 26 June 2021.
- உசாத்துணை மேற்கோள்
- உசாத்துணையாக மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து உசாத்துணைகளும் உசாத்துணை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
- ஒற்றை ஆசிரியர்: ஆசிரியரின் பெயர் (பெயரின் முதல் எழுத்து அல்லாமல்) மற்றும் வெளியான ஆண்டு
- இரண்டு ஆசிரியர்கள்;: ஆசிரியர்களின் பெயர்கள் (பெயரின் முதல் எழுத்து அல்லாமல்) மற்றும் வெளியான ஆண்டு
- மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள்;: ஆசிரியரின் பெயர் (பெயரின் முதல் எழுத்து அல்லாமல்), “et al.” மற்றும் வெளியான ஆண்டு உதாரணம்: (Ramanan et al., 2004.)
- இணைய உசாத்துணைகளை மேற்கோள் காட்டுவது கட்டுரைகளின் உசாத்துணையைப் போல் இருக்கலாம்.
தட்டச்சு அமைப்பிற்கான வடிவம்
எழுத்து பிரதிகள் MS Word ஐ பயன்படுத்தி தட்டச்சு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் இலக்கம் இடப்பட வேண்டும்.
- காகித அளவு : A4 வகை
- ஓரங்கள் : மேல், கீழ், இடது, மற்றும் வலது ஓரங்களில் 25அஅ
- வரிகளுக்கான இடைவெளி : 1.15
- பக்கம் மற்றும் வரி எண் : சுருக்க பக்கத்தில் அரேபிய எண்களை பயன்படுத்தி அனைத்து பக்கங்களும் தொடர்ச்சியாக இலக்கம் இடப்பட வேண்டும்
- எழுத்துரு மற்றும் எழுத்துரு அளவு : பாமினி 12 புள்ளி
- பிரதான தலைப்புக்கு : 14 புள்ளி மற்றும் தடித்த எழுத்து
- உப தலைப்புக்கு : 12 புள்ளி மற்றும் தடித்த எழுத்து
- சொற்களின் எண்ணிக்கை : 3000 – 5000 சொற்கள்