ஆய்விதழின் கொள்கைகள்
மதிப்பாய்வுக் கொள்கை
பிரசுரத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துப் பிரதிகளின் உயர்தரத்தை உறுதிப்படுத்த இருவரை உள்ளடக்கிய ஒரு கூட்டு மதிப்பாய்வு அமைப்பு பயன்படுத்தப்படுகின்றது.
பதிப்புரிமைக் கொள்கை
ஆசிரியர்கள் பொருந்தமான பதிப்புரிமை சட்டங்கள் மற்றும் மரபுகளை பின்பற்ற வேண்டும். பதிப்புரிமை உள்ளடக்கம் சரியான அனுமதி மற்றும் ஒப்புதலுடன் மட்டுமே மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும். இது தொடர்புடைய முந்தைய படைப்புக்கள் மற்றும் வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியரின் உரிமை சரியாக ஒப்புக்கொள்ளப்பட்டு குறிப்பிடப்பட வேண்டும்.
வணிகப் பொருளாதாரம் மற்றும் முகாமைத்துவ ஆய்வு இதழ் எழுத்துப் பிரதியை வெயியிடுவதற்கான பொறுப்பை மட்டுமே எடுத்துக் கொள்கின்றது. இதழ் தொகுப்பாளர்கள் கட்டுரை ஆசிரியர்களுக்கு எந்தவிதமான பாகுபாடும் காட்டக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
சக மதிப்பாய்வு செயன்முறை
வணிக பொருளாதாரம் மற்றும் முகாமைத்துவ ஆய்வு இதழ் ஒரு அநாமதேய மதிப்பாய்வு செயன்முறையை இயக்குகின்றது. அனைத்து பங்களிப்புகளும் ஆரம்பத்தில் இதழ்களுக்கு ஏற்றதாக உள்ளதா என ஆசிரியரினால் மதிப்பிடப்படும். படைப்புக்களின் அறிவியல் தரத்தை மதிப்பிடுவதற்கு பொருத்தமானதாக கருதப்படும் படைப்புக்கள் பொதுவாக குறைந்த பட்சம் இரண்டு சுயாதீன மதிப்பாய்வாளர்களுக்கு அனுப்பப்படும். கட்டுரைகளை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது தொடர்பான இறுதி முடிவுக்கு இதழாசிரியர் பொறுப்பு ஆவார். இதழாசிரியரின் முடிவே இறுதியானது. இதழாசிரியர்கள் தாங்களாகவே எழுதிய அல்லது குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக ஊழியர்களால் எழுதப்பட்ட ஆவணங்கள் அல்லது ஆசிரியருக்கு ஆர்வமுள்ள தயாரிப்புக்கள் அல்லது சேவைகள் தொடர்பான முடிவுகளில் விலகிக் கொள்ள முடியாது. அத்தகைய சமர்பிப்புகள் இதழின் வழக்கமான நடைமுறைகள் அனைத்திற்கும் உட்பட்டதோடு தொடர்புடைய ஆசிரியர் மற்றும் அவர்களின் ஆய்வுக் குழுக்களின் சக மதிப்பாய்வு சுயாதீனமாக கையாளப்படும்.